Posts

Showing posts from July, 2020

சாலையில் மாலை பயணம்.

Image
தோட்டத்திலிருந்து ரோட்டுக்கு ஒரு வண்டியும், ரோட்டில் இருந்து ஊருக்கு ஒரு வண்டியும் ஆக மொத்தம் இரண்டு வண்டியில் எனது பயணம் தொடங்கியது..... விமானத்தில் போக சமாதானம் செய்ய  அழுது புரளும் குழந்தைகளிடமிருந்து மாறி... இருசக்கர வண்டியில் போகவே எனது அவா வெகுவாக மாறியது. முத்திரை இல்லாமல் ஒரு முக கவசம், புத்தகத்துடன் ஒரு கைப்பை, நேரம் காக்க கைக்கடிகாரம், சோகம் இல்லாமல் பெரும் புன்னகை, அப்பா வழி அனுப்பி வைத்ததும் சித்தப்பாவிடம் சிறு புன்னகை கொண்டு சிறிய வண்டியில் எனது உரிய பயணம். போகும் வழியில் எனது விழியில் சாயலாய் அமைந்த நேர் கோபுரம், கூட்டநெரிசலில் சண்டை போடாமல் சாமியைப் போகும் வழியிலேயே தரிசித்து விட்டேன். சித்தப்பா சிரித்ததும் முறைக்கும் பாணியில் இருந்த என் முகத்தை சித்தப்பாவின் நேர்கோட்டிற்கு இணையாக சிரிக்க முயன்று சிரித்து முடித்து தூரத்தை பார்க்க அரை தூரம் சென்று விட்டது, எனது மீதி பயணம் நெருங்கிவிட்டது. அலைபேசியை அடிக்க விடாமல் மனதை பறக்க விடாமல் சிந்தனையை சிதறவிடாமல் அலைபேசியில் உள்ள புத்தக கோப்பினை திறந்து, பிடித்த புத்தகத்தை ஆராய்ந்து, சுய வழியில் சுயமரியாதை புத்தகத்தை எடுத்தேன்,...