சாலையில் மாலை பயணம்.



தோட்டத்திலிருந்து ரோட்டுக்கு ஒரு வண்டியும்,
ரோட்டில் இருந்து ஊருக்கு ஒரு வண்டியும்
ஆக மொத்தம் இரண்டு வண்டியில் எனது பயணம் தொடங்கியது.....

விமானத்தில் போக சமாதானம் செய்ய  அழுது புரளும் குழந்தைகளிடமிருந்து மாறி...
இருசக்கர வண்டியில் போகவே எனது அவா வெகுவாக மாறியது.
முத்திரை இல்லாமல் ஒரு முக கவசம்,
புத்தகத்துடன் ஒரு கைப்பை,
நேரம் காக்க கைக்கடிகாரம்,
சோகம் இல்லாமல் பெரும் புன்னகை,
அப்பா வழி அனுப்பி வைத்ததும் சித்தப்பாவிடம் சிறு புன்னகை கொண்டு
சிறிய வண்டியில் எனது உரிய பயணம்.


போகும் வழியில்
எனது விழியில்
சாயலாய் அமைந்த நேர் கோபுரம்,
கூட்டநெரிசலில் சண்டை போடாமல்
சாமியைப் போகும் வழியிலேயே தரிசித்து விட்டேன்.
சித்தப்பா சிரித்ததும்
முறைக்கும் பாணியில் இருந்த என் முகத்தை
சித்தப்பாவின் நேர்கோட்டிற்கு இணையாக சிரிக்க முயன்று
சிரித்து முடித்து தூரத்தை பார்க்க
அரை தூரம் சென்று விட்டது,
எனது மீதி பயணம் நெருங்கிவிட்டது.
அலைபேசியை அடிக்க விடாமல்
மனதை பறக்க விடாமல்
சிந்தனையை சிதறவிடாமல் அலைபேசியில் உள்ள புத்தக கோப்பினை திறந்து,
பிடித்த புத்தகத்தை ஆராய்ந்து,
சுய வழியில் சுயமரியாதை புத்தகத்தை எடுத்தேன்,
போகும் வழியிலேயே படித்தேன்.


மாலை வேளையில் மசூதியின் அழகு பரவசம் அடையச் செய்தது.
அல்லாவை தானாவே என் கை தரிசிக்கச் செய்தது,
மங்கிய மாலைப் பொழுதில்
எனது பார்வையும் மங்கியது,
மாலை மயக்கத்தில் சாலை பயணத்தில் என்னையே மறந்து
சுயமரியாதை புத்தகத்தை படித்தேன்,

பயணத்தை முடிக்க எண்ணி ஊரை அடைந்தேன்,

காலை வேளையில் கோலம் போடாமல்
மாலை வேளையில் மங்கிய ஒளியில்
என்னைப் பார்த்துக் கொண்டிருந்த
பாட்டியின் வீட்டுக்குள் இருந்து
இதை எழுதி முடித்தேன்.....

Comments

Post a Comment

Popular posts from this blog

திருமணம் ❤️♥️

பூத்துக்குலுங்கும் பூங்கா