மகாத்மா காந்தி

 


கவிதை தலைப்பு: மகாத்மா காந்தி.


 நேற்று இல்லாமல் இன்று இல்லை என்பது போல, காந்தி அடிகள் இல்லாமல் இன்று இந்நொடி நாம் இல்லை.


சரித்திரம் படைத்த காந்தி அடிகளை சரியாக இருபது அடிகளுக்குள் கொண்டு வருவது சாதாரண காரியமல்ல, எனினும்....



பெயரில் அமைதியையும், குணத்தில் நற்பண்புகளையும்,

உள்ளத்தில் உறுதியையும்,

உயிரில் அன்பையும்,

பேச்சில் தெளிவையும்,

பார்வையில் கனிவையும்

காந்தி அடிகளிடம் இருந்து நம் பெற்றோரும், கற்றோரும் நமக்கு கற்றுத்தந்தனர் என்பதை உணர்கிறேன்..


தேசம் மீது நேசம் கொண்டு சுவாசம் முதல் உயிர்வாசல் வரை உயர் எண்ணம் கொண்டு உயிர் போகும் வரை உலகிற்கு ஒளியான இந்திய நாட்டு மக்களின் ஒழியை உலகிற்கு அறியச்செய்த ஆற்றல் மகாத்மா..


வரி விதித்து வலது காளை மேல் போட்டு அமர்ந்த மேல்நாட்டவரின் மேல் அடியெடுத்து மெல்ல மெல்ல அகிம்சை அடிகொடுத்து எந்நாட்டவரும் இன்று என் நாட்டை வியந்து பார்க்க வழிவகைச்செய்து வளர்ச்சி விதை போட்ட என் காந்தியடிகளின் பாதம் தொட்டு பனிந்து வணங்கி இக்கவிதையை ”பாரதம் வளர, காந்தியடிகளின் புகழ் வளர” என்று நிறைவு செய்கிறேன்.


நன்றி.

- செ. அருண் குமார். 






Comments

Popular posts from this blog

திருமணம் ❤️♥️

சாலையில் மாலை பயணம்.

பூத்துக்குலுங்கும் பூங்கா