இந்திய அரசியலமைப்பு..
இன்று நம் கருத்தை சுதந்திரமாக எழுதுவதற்கு கூட சுதந்திரமும், அங்கிகாரமும் அளித்தது இந்திய அரசியலமைப்பே,
கட்டுரையில் முன்னுரை இருப்பதுபோல இந்திய அரசியலமைப்பிலும் முன்னுரை உள்ளது... முன்னுரை முழுவதும் நல் உரையாகவும், பொதுமறையாகவும் உள்ளது,
ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஒற்றுமையாக வாழவும், சகோதரத்துவம் காணவும் வழிவகுத்தது இந்திய அரசியலமைப்பே,✒️
அனைவருக்கும் சுதந்திரமும், நடுநிலைமைத்தன்மையும், கல்வியும், கலாச்சாரமும், மொழியும் நடையும் பொதுவுடமை என்பதை உரக்கச் சொல்வது இந்திய அரசியலமைப்புச் சட்டமே,🖋️
இனத்தாலும் மொழியாலும் பணத்தாலும் பசியாலும் படிக்க இயலாத சூழ்நிலையை ஒழித்து படித்தால் நீ அனைத்தையும் பெறலாம் என்று கூறி, ஆரம்பக்கல்வியை கட்டாயமாக்கி, ஆண் பெண் என்ற பாகுபாடு நீக்கி,
அண்டம் முழுவதும் இந்திய ஆற்றலையும், கலையையும் கற்றவர்களையும் ஒளிபெறச் செய்தது இந்திய அரசியலமைப்பே,🖊️
சமூகத்தில் சம உரிமை சரியும் போது,
சாதாரண மக்களும் சட்டம் பயின்று சாட்டையடி கொடுக்கலாம் என்பதை வலியுறுத்துவது இந்திய அரசியலமைப்பு...⚖️
கண்ணீர் வடிக்கும் நேரங்களில் கண்ணீர் துடைக்க ஒரு கை தானாக வரும் என்பது போல சட்டங்கள் சரியும் போது சட்டம் பயின்ற மேதைகள் சட்டங்களை நிலை நாட்டி சரித்திரம் படைக்க... இந்திய அரசியலமைப்பே..!🖊️
தமிழ் ஆர்வம் கொண்ட ஆங்கிலத்துறை மாணவன்.
🖊️செ. அருண் குமார்.
Comments
Post a Comment