சுற்றுச்சூழல் பாதுகாப்பு

 காசு மேல் காதல் கொண்டு சுவாசிக்கத் தூய காற்று இல்லாமல் பண்ணி விட்டோம்...


காலை முதல் மாலை வரை ஓய்வில்லாமல் உழைத்து உழைத்து இயற்கைக்கு ஓய்வு கொடுக்க மறந்து விட்டோம்...


நேரம் பாராமல் பாரம் குறையாமல் பல பொருட்களை பூமி மீது ஏற்றி விட்டோம்...



வாழ்நாள் குறையாமல் வாழ்க்கை நிறையாமல் காலம் குறையாமல் காலடி பதிக்காமல் பல பொருட்களைப் பயன்படுத்தி விட்டோம்...


ஒரு செடி கூட வளர்க்காமல் பலவிதை கொடுக்கும் மரங்களை வேரோடு பிடுங்கி விட்டோம்...


எட்டு வழிச்சாலை என்று கூறி ஏகப்பட்ட மரங்களை அழித்து விட்டோம்...


காபி குடிக்கக் காகிதம் மடிக்க மரங்களை பயன்படுத்திவிட்டு தூயகாற்று இல்லாமல் ஆக்கி விட்டோம்...


நம் பாட்டன் விட்டுப்போன சொத்தை எவனோ ஒருவன் தூக்கி போனான்...


போனதை நினைத்து வருத்தப்படாமல், இனியாவது இயற்கையை வேதனைக்கு உள்ளாக்காமல், இயற்கையோடு ஒன்றிணைந்து சாதனை புரிவோம்...

📝செ. அருண் குமார் 🖊️

Comments

Popular posts from this blog

திருமணம் ❤️♥️

சாலையில் மாலை பயணம்.

பூத்துக்குலுங்கும் பூங்கா