திருமணம் ❤️♥️

 உறவினர்கள் ஒன்று சேர்ந்து


இரு உள்ளங்கள் ஒன்று சேர❣️


குணம் அறிந்து மனம் அறிந்து


நல் தேதி குறித்து📝

பத்திரிக்கை அடித்து


சொந்தங்கள் அழைத்து😍


புத்தாடை எடுத்து


புது நகைகள் வாங்கி✨


ஊர்மக்கள் ஒன்றுகூடி


நல் மக்கள் வந்து போக


பனித்துளி போல பன்னீர் துளிகள் வரவேற்க🌨️


ஜவ்வாது வாசனை மணமணக்க


அல்லி மலர்கள் கலகலக்க


வளையல் சத்தம் குலுகுலுங்க


யார் யாரோ மணமகளை யார் என்று எட்டிப் பார்க்க..


மணமகளைப் பார்த்து ரோஜாமலர் பொறாமைப்பட


ராஜா போல மணமகன் தோற்றம் புரிய


நேற்று நீ யாரோ நான் யாரோ என்பது போயி


இனி நாம் தானே என்று மாறி


மணமகள்,கண்ணீர் துளிகளை மனதுக்குள் ஓட விட...


தந்தையின் பாசம் இனி தன் கணவனின் பாசமாக இடம் மாற... 💞

செய்த சேட்டைகள் மனம் முழுக்க இளைப்பாற..


தாய்வீடு கண் முழுக்க எனினும் தன் கையை மணவாளனுக்கு கொடுக்க...


மணமகன், அம்மாவின் பாசத்தை இவள் கொடுப்பாளா என நினைத்து💝, தன் முன்னாள் காதல் மறைத்து,


 இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை மறந்து இனி இவள் தான் எல்லாம்♥️ என்று அவளை கைபிடித்து..


மோதிரங்கள் அணிந்து💍


நல் முத்தங்கள் பரிமாறி


இருவரும் ஒன்று சேர்ந்து

புதுவாழ்வு தொடுத்து


புதுவரவு கொடுத்து

மீண்டும் தன் குழந்தையின் 'திருமணம்' என எண்ணி, சமாதானம் கொண்டு முதல் அடி முதல் இறுதிவரை மீண்டும் படித்து புன்னகை கொள்வோம்.


ஆங்கிலம் பயின்றாலும் தமிழ் மறவாத

செ. அருண் குமார்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சாலையில் மாலை பயணம்.

பூத்துக்குலுங்கும் பூங்கா