பேருந்து பயணம்...

 பேருந்து பயணம்...


ஒய்யாரமாய் அமர கோடி ரூபாய் வண்டி இருந்தாலும், பேருந்தில் செல்வோர்க்கு ஒரு கை அளவு உள்ள காற்றாடி சன்னல் இருக்கை தான் சிறு காலத்திற்கு.. 


அடி, தடி போது உரசியது ஒரு நேரம், இப்போது சண்டையே வராமல் இடித்துக்கொண்டாலும் இன்பம் கொள்வோம் பேருந்தில் ஏற இடம் கிடைத்தது என்று.. 



பசி போக்க பல உணவிருந்தாலும், பேருந்தில் நிற்கும் போது கை, கால் வலி போக்க கானா பாட்டோ, இல்லை காதல் பாட்டோ..


அமெரிக்காவில் படித்திருந்தாலும் பேருந்தில் நம் அப்பத்தா பேசும் அழகான தமிழுக்கு ஈடாகுமா..


பல காதலுக்கு பந்தற்காலாகவும், பல சாதனைக்கு மேம் பாலமாகவும், எம் போன்ற வாழ்நாள் மாணவனுக்கு வாழ்நாள் முழுவதும் பாடத்தையும், பாமர மக்களுக்கு பாய் மரமாகவும் அமைந்த பேருந்தில் இருந்தும், 

குறிப்பாக குழிதடத்தில் அதிகமாக குலுங்கும் கடைசி இருக்கையிலிருந்து கடைசி அடி..


நன்றி.


இவன் - செ. அருண் குமார்.

Comments

Popular posts from this blog

திருமணம் ❤️♥️

சாலையில் மாலை பயணம்.

பூத்துக்குலுங்கும் பூங்கா