Posts

பேருந்து பயணம்...

 பேருந்து பயணம்... ஒய்யாரமாய் அமர கோடி ரூபாய் வண்டி இருந்தாலும், பேருந்தில் செல்வோர்க்கு ஒரு கை அளவு உள்ள காற்றாடி சன்னல் இருக்கை தான் சிறு காலத்திற்கு..  அடி, தடி போது உரசியது ஒரு நேரம், இப்போது சண்டையே வராமல் இடித்துக்கொண்டாலும் இன்பம் கொள்வோம் பேருந்தில் ஏற இடம் கிடைத்தது என்று..  பசி போக்க பல உணவிருந்தாலும், பேருந்தில் நிற்கும் போது கை, கால் வலி போக்க கானா பாட்டோ, இல்லை காதல் பாட்டோ.. அமெரிக்காவில் படித்திருந்தாலும் பேருந்தில் நம் அப்பத்தா பேசும் அழகான தமிழுக்கு ஈடாகுமா.. பல காதலுக்கு பந்தற்காலாகவும், பல சாதனைக்கு மேம் பாலமாகவும், எம் போன்ற வாழ்நாள் மாணவனுக்கு வாழ்நாள் முழுவதும் பாடத்தையும், பாமர மக்களுக்கு பாய் மரமாகவும் அமைந்த பேருந்தில் இருந்தும்,  குறிப்பாக குழிதடத்தில் அதிகமாக குலுங்கும் கடைசி இருக்கையிலிருந்து கடைசி அடி.. நன்றி. இவன் - செ. அருண் குமார்.

திருமணம் ❤️♥️

  உறவினர்கள் ஒன்று சேர்ந்து இரு உள்ளங்கள் ஒன்று சேர❣️ குணம் அறிந்து மனம் அறிந்து நல் தேதி குறித்து📝 பத்திரிக்கை அடித்து சொந்தங்கள் அழைத்து😍 புத்தாடை எடுத்து புது நகைகள் வாங்கி✨ ஊர்மக்கள் ஒன்றுகூடி நல் மக்கள் வந்து போக பனித்துளி போல பன்னீர் துளிகள் வரவேற்க🌨️ ஜவ்வாது வாசனை மணமணக்க அல்லி மலர்கள் கலகலக்க வளையல் சத்தம் குலுகுலுங்க யார் யாரோ மணமகளை யார் என்று எட்டிப் பார்க்க.. மணமகளைப் பார்த்து ரோஜாமலர் பொறாமைப்பட ராஜா போல மணமகன் தோற்றம் புரிய நேற்று நீ யாரோ நான் யாரோ என்பது போயி இனி நாம் தானே என்று மாறி மணமகள்,கண்ணீர் துளிகளை மனதுக்குள் ஓட விட... தந்தையின் பாசம் இனி தன் கணவனின் பாசமாக இடம் மாற... 💞 செய்த சேட்டைகள் மனம் முழுக்க இளைப்பாற.. தாய்வீடு கண் முழுக்க எனினும் தன் கையை மணவாளனுக்கு கொடுக்க... மணமகன், அம்மாவின் பாசத்தை இவள் கொடுப்பாளா என நினைத்து💝, தன் முன்னாள் காதல் மறைத்து,   இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை மறந்து இனி இவள் தான் எல்லாம்♥️ என்று அவளை கைபிடித்து.. மோதிரங்கள் அணிந்து💍 நல் முத்தங்கள் பரிமாறி இருவரும் ஒன்று சேர்ந்து புதுவாழ்வு தொடுத்து புதுவரவு கொடுத்து மீண்டும் தன் குழந்தை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

 காசு மேல் காதல் கொண்டு சுவாசிக்கத் தூய காற்று இல்லாமல் பண்ணி விட்டோம்... காலை முதல் மாலை வரை ஓய்வில்லாமல் உழைத்து உழைத்து இயற்கைக்கு ஓய்வு கொடுக்க மறந்து விட்டோம்... நேரம் பாராமல் பாரம் குறையாமல் பல பொருட்களை பூமி மீது ஏற்றி விட்டோம்... வாழ்நாள் குறையாமல் வாழ்க்கை நிறையாமல் காலம் குறையாமல் காலடி பதிக்காமல் பல பொருட்களைப் பயன்படுத்தி விட்டோம்... ஒரு செடி கூட வளர்க்காமல் பலவிதை கொடுக்கும் மரங்களை வேரோடு பிடுங்கி விட்டோம்... எட்டு வழிச்சாலை என்று கூறி ஏகப்பட்ட மரங்களை அழித்து விட்டோம்... காபி குடிக்கக் காகிதம் மடிக்க மரங்களை பயன்படுத்திவிட்டு தூயகாற்று இல்லாமல் ஆக்கி விட்டோம்... நம் பாட்டன் விட்டுப்போன சொத்தை எவனோ ஒருவன் தூக்கி போனான்... போனதை நினைத்து வருத்தப்படாமல், இனியாவது இயற்கையை வேதனைக்கு உள்ளாக்காமல், இயற்கையோடு ஒன்றிணைந்து சாதனை புரிவோம் ... 📝செ. அருண் குமார் 🖊️

பூத்துக்குலுங்கும் பூங்கா

  காதல் ஜோடிகளும்👩‍❤️‍👩👩‍❤️‍👩 கண்கவர் பூக்களும்🌸🌼 துளிர்விடும் மலர்களும்🍁🍁 துள்ளிக்குதிக்கும் குழந்தைகளும்👩‍👦‍👦👩‍👦‍👦 கீச் கீச்சென்று குருவிகளும் 🕊️🕊️ என்னைப் பார்ப்பார் என்று பறவைகளும்🕊️🕊️ தென்றலைத் தெளிக்கும் தென்னை மரங்களும்🌴🌴 வாசனை அளிக்கும் வண்ண மலர்களும்🌻🌻 மோகம் கொண்ட ரோஜாக்களும்🌹 🌹 தாகம் கொண்ட விலங்குகளும்🐇🐇 தன்னை மறந்த மனிதர்களும்✨✨ தோகை விரிக்கும் மயில் கூட்டங்களும்🦃🦃 பாதை மறந்த பட்டாம்பூச்சியும்🦋🦋 போதை கொள்ளச் செய்யும் மின்மினி பூச்சியும்😍😍 நேரம் நொடி காண மரங்கொத்தியும்🍁🐦 நேற்றைய சோகம் மறக்க நல் ஓசையும்🎶🎶 இரவை மறந்து பகல் தூக்கமும்✨✨ இனிய நினைவுகள் எட்டிப் பார்க்கவும்💬💬 உடல் சோர்வை நீக்கவும்❤️❤️ மனச் சோர்வை போக்கவும்❣️❣️ அனைவரும் பூங்கா போகவும்..... பாசத்துடன்  செ. அருண் குமார்...

இந்திய அரசியலமைப்பு..

 இன்று நம் கருத்தை சுதந்திரமாக எழுதுவதற்கு கூட சுதந்திரமும், அங்கிகாரமும் அளித்தது இந்திய அரசியலமைப்பே, கட்டுரையில் முன்னுரை இருப்பதுபோல இந்திய அரசியலமைப்பிலும் முன்னுரை உள்ளது... முன்னுரை முழுவதும் நல் உரையாகவும், பொதுமறையாகவும் உள்ளது, ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஒற்றுமையாக வாழவும், சகோதரத்துவம் காணவும் வழிவகுத்தது இந்திய அரசியலமைப்பே,✒️ அனைவருக்கும் சுதந்திரமும், நடுநிலைமைத்தன்மையும், கல்வியும், கலாச்சாரமும், மொழியும் நடையும் பொதுவுடமை என்பதை உரக்கச் சொல்வது இந்திய அரசியலமைப்புச் சட்டமே,🖋️ இனத்தாலும் மொழியாலும் பணத்தாலும் பசியாலும் படிக்க இயலாத சூழ்நிலையை ஒழித்து படித்தால் நீ அனைத்தையும் பெறலாம் என்று கூறி, ஆரம்பக்கல்வியை கட்டாயமாக்கி, ஆண் பெண் என்ற பாகுபாடு நீக்கி ,  அண்டம் முழுவதும் இந்திய ஆற்றலையும், கலையையும் கற்றவர்களையும் ஒளிபெறச் செய்தது இந்திய அரசியலமைப்பே,🖊️ சமூகத்தில் சம உரிமை சரியும் போது,  சாதாரண மக்களும் சட்டம் பயின்று சாட்டையடி கொடுக்கலாம் என்பதை வலியுறுத்துவது இந்திய அரசியலமைப்பு...⚖️ கண்ணீர் வடிக்கும் நேரங்களில் கண்ணீர் துடைக்க ஒரு கை தானாக வரும் என்பது போல சட்டங்க

மகாத்மா காந்தி

Image
  கவிதை தலைப்பு: மகாத்மா காந்தி.  நேற்று இல்லாமல் இன்று இல்லை என்பது போல, காந்தி அடிகள் இல்லாமல் இன்று இந்நொடி நாம் இல்லை. சரித்திரம் படைத்த காந்தி அடிகளை சரியாக இருபது அடிகளுக்குள் கொண்டு வருவது சாதாரண காரியமல்ல, எனினும்.... பெயரில் அமைதியையும், குணத்தில் நற்பண்புகளையும், உள்ளத்தில் உறுதியையும், உயிரில் அன்பையும், பேச்சில் தெளிவையும், பார்வையில் கனிவையும் காந்தி அடிகளிடம் இருந்து நம் பெற்றோரும், கற்றோரும் நமக்கு கற்றுத்தந்தனர் என்பதை உணர்கிறேன்.. தேசம் மீது நேசம் கொண்டு சுவாசம் முதல் உயிர்வாசல் வரை உயர் எண்ணம் கொண்டு உயிர் போகும் வரை உலகிற்கு ஒளியான இந்திய நாட்டு மக்களின் ஒழியை உலகிற்கு அறியச்செய்த ஆற்றல் மகாத்மா.. வரி விதித்து வலது காளை மேல் போட்டு அமர்ந்த மேல்நாட்டவரின் மேல் அடியெடுத்து மெல்ல மெல்ல அகிம்சை அடிகொடுத்து எந்நாட்டவரும் இன்று என் நாட்டை வியந்து பார்க்க வழிவகைச்செய்து வளர்ச்சி விதை போட்ட என் காந்தியடிகளின் பாதம் தொட்டு பனிந்து வணங்கி இக்கவிதையை ”பாரதம் வளர, காந்தியடிகளின் புகழ் வளர” என்று நிறைவு செய்கிறேன். நன்றி. - செ. அருண் குமார். 

சாலையில் மாலை பயணம்.

Image
தோட்டத்திலிருந்து ரோட்டுக்கு ஒரு வண்டியும், ரோட்டில் இருந்து ஊருக்கு ஒரு வண்டியும் ஆக மொத்தம் இரண்டு வண்டியில் எனது பயணம் தொடங்கியது..... விமானத்தில் போக சமாதானம் செய்ய  அழுது புரளும் குழந்தைகளிடமிருந்து மாறி... இருசக்கர வண்டியில் போகவே எனது அவா வெகுவாக மாறியது. முத்திரை இல்லாமல் ஒரு முக கவசம், புத்தகத்துடன் ஒரு கைப்பை, நேரம் காக்க கைக்கடிகாரம், சோகம் இல்லாமல் பெரும் புன்னகை, அப்பா வழி அனுப்பி வைத்ததும் சித்தப்பாவிடம் சிறு புன்னகை கொண்டு சிறிய வண்டியில் எனது உரிய பயணம். போகும் வழியில் எனது விழியில் சாயலாய் அமைந்த நேர் கோபுரம், கூட்டநெரிசலில் சண்டை போடாமல் சாமியைப் போகும் வழியிலேயே தரிசித்து விட்டேன். சித்தப்பா சிரித்ததும் முறைக்கும் பாணியில் இருந்த என் முகத்தை சித்தப்பாவின் நேர்கோட்டிற்கு இணையாக சிரிக்க முயன்று சிரித்து முடித்து தூரத்தை பார்க்க அரை தூரம் சென்று விட்டது, எனது மீதி பயணம் நெருங்கிவிட்டது. அலைபேசியை அடிக்க விடாமல் மனதை பறக்க விடாமல் சிந்தனையை சிதறவிடாமல் அலைபேசியில் உள்ள புத்தக கோப்பினை திறந்து, பிடித்த புத்தகத்தை ஆராய்ந்து, சுய வழியில் சுயமரியாதை புத்தகத்தை எடுத்தேன், போக